Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2019 வரை விளையாட விரும்புகிறேன்: கிரிக்கெட் வீரரின் ஓய்வு குறித்த பதில்...

Last Updated: வியாழன், 1 மார்ச் 2018 (17:54 IST)
36 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதோடு இந்திய அணியின் ஆதிக்கத்தை பற்றியும் பேசியுள்ளார்.
 
லாரஸ் விருது வழங்கும் விழாவில் யுவராஜ் சிங் கூறியதாவது, ஏப்ரல் மாதம் துவங்க உள்ள ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். 
 
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. கேப்டனாக விராட் கோலி அணியை சிறப்பாக வழி நடத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். 
 
வெளிநாடு சென்று 3 தொடர்களில் இரண்டை வென்றுள்ளது இந்திய அணியின் ஆதிக்கத்தையே காட்டுகிறது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நம்பிக்கை இதன் மூலம் கிடைத்துள்லது. இது நல்ல துவக்கமாகும். 
 
மேலும், நான் 2019 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதன் பிறகே ஓய்வு குறித்து முடிவு செய்வேன். தற்போதைக்கு ஓய்வு குறித்து எந்த வித யோசனையும் இல்லை என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :