திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:02 IST)

டி20 உலக கோப்பை கிரிக்கெட், ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: ஆரோன் பின்ச் கேப்டன்

australia
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் அந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து,நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். 
 
முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.
 
 இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரங்கள் வருமாறு
 
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கும்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிச்சேல் மார்ஷ், ஸ்டீவ் சுமித், கானே ரிச்சர்ட்சன், ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஹாசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மேக்யூ வாடே, ஆடம் ஜம்பா, டிம் டேவிட்