வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:03 IST)

2022 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? எப்போது?

2022 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? எப்போது?
சமீபத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
 
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஏழு மைதானங்களில் உலக கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளதாகவும் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 9ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 10-ஆம் தேதியும் நடைபெறும் என்றும் இந்த போட்டியின் முழு அட்டவணை வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியிட்டுள்ளன 
 
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன என்றும் மற்ற அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தகுதி பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன