வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (07:00 IST)

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்து அதில் தகுதி பெற்ற அணிகள் நாக் அவுட் போட்டியில் விளையாடின. நாக் அவுட் போட்டிகளும் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது எட்டு அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த அணிகள் எவை எவை என்பதை பார்ப்போம்
 
காலிறுதி போட்டிக்கு உருகுவே, பிரான்ஸ், பிரேசில் , பெல்ஜியம், ரஷ்யா, குரோஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆகிய எட்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன
 
இவற்றில் முதல் காலிறுதி போட்டி ஜூலை 6ஆம் தேதி உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
 
இரண்டாவது காலிறுதி போட்டி ஜூலை 6ஆம் தேதி பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
 
மூன்றாவது காலிறுதி போட்டி ஜூலை 7ஆம் தேதி ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
 
நான்காவது காலிறுதி போட்டி ஜூலை 7ஆம் தேதி ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
 
இந்த காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.