தோனி தவறியதை விராட் கோஹ்லி செய்வாரா?

Virat Kohli
Last Updated: செவ்வாய், 31 ஜூலை 2018 (19:48 IST)
இங்கிலாந்து மண்ணில் தோனி வெல்லாத டெஸ்ட் தொடரை விராட் கொஹ்லி வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

 
தோனி தலைமையிலான இந்திய அணி 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது டெஸ்ட் தொடரை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது.
 
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. கங்குலி தலைமையிலான இந்திய அணி 2002ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை டிரா செய்தது. 2007ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது.
 
2014ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதையடுத்து தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
 
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் விராட் கோஹ்லி, கபில் தேவ், கங்குலி, டிராவிட் ஆகியோரை அடுத்து சாதனை பட்டியலில் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :