Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'திரும்ப திரும்ப எங்களை கூப்பிட வேண்டும்’ - இந்தியாவிற்கு வங்கதேசம் எச்சரிக்கை

Last Modified: சனி, 4 பிப்ரவரி 2017 (16:00 IST)

Widgets Magazine

நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து. இந்தியா எங்களை மீண்டும், மீண்டும் விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம் என்று வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.


 

வங்கதேச கிரிக்கெட் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு வந்துள்ளது. அந்த அணி வருகின்ற 9ஆம் தேதி, இந்தியாவுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதுகிறது.

இப்போட்டியில் விளையாடும் வங்கதேச அணி வீரர்கள் ஹைதராபாத்தை வந்தடைந்தனர். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இன்றுவிளையாடுகிறார்கள்.

இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ள நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து. இந்தியா எங்களை மீண்டும், மீண்டும் விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இந்தியா வந்துள்ள எங்கள் அணி வலிமையானது. சமீபத்தைய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தங்களது திறமையை தக்க வைத்து கொள்வார்கள் என நம்புகிறேன். இந்தியா வலுவான அணியாகும். சொந்த மண்ணில் அவர்கள் எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள்.

இந்தியாவுக்கு எதிராக 5 நாட்களும் விளையாடவே விரும்புகிறோம். வெறும் 2 அல்லது 3 நாளில் போட்டியை முடிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தோனி இருக்கும் போது எனக்கென்ன? கோலி ஓபன் டாக்!!

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும், தோனி இருக்கும் வரை நான் கத்துக்குட்டி தான் என இந்திய ...

news

டி20 போட்டி களத்தில் இதுவரை செய்யாத ஒன்றை செய்த தோனி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ...

news

போதைமருந்து உட்கொண்ட ஆண்ட்ரூ ரஸ்ஸலுக்கு ஓர் ஆண்டு தடை

சர்வதேச விதிமுறையை மீறி போதைமருத்து பயன்படுத்திய மேற்கிந்திய தீவு அணியைச் சேர்ந்த ...

news

நான் தோனியின் முடிவுகளை செயல்படுத்தும் வீரர்: கோலி பேட்டி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ...

Widgets Magazine Widgets Magazine