வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (13:35 IST)

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Chinnasamy
டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த மே 12-ம் தேதி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது, போட்டியைக் காண வந்தவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கத்தார் ஏர்வேஸ் ஃபேன்ஸ் மொட்டை மாடியில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட சைதன்யா என்ற இளைஞர் ஒருவர், சில நிமிடங்களிலேயே வயிற்று வலியால் துடித்துள்ளார். அத்துடன் அவர் அமர்ந்திருந்த இடத்திலேயே அவர் மயங்கிச் விழுந்தார். 

உடனடியாக மைதான ஊழியர்கள், சைதன்யாவை மீட்டு முதலுதவி அளித்து தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர் பரிசோதித்த போது, சைதன்யா சாப்பிட்ட உணவு விஷம் என்பதை உறுதி செய்தார்.

 
இதுகுறித்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் சைதன்யா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் ஏற்கனவே தரமற்ற உணவு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.