ஜோப்ரா ஆர்ச்சரின் bunny ஆகிய வார்னர் – வச்சு செய்த புள்ளி விவரம்!

Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (16:40 IST)

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா பந்துவீச்சில் டேவிட் வார்னர் மிக மோசமாக விளையாடி அவுட் ஆகியுள்ளார்.

ஒரு பேட்ஸ்மேன் ஒரே பவுலரிடம் தொடர்ந்து அவுட் ஆனால் கிரிக்கெட்டில் அவர்களை bunny
அதாவது செல்லப்பிள்ளை என்று கேலியாக அழைக்கப்படுவதுண்டு. அப்படிதான் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு செல்லப் பிள்ளையாகி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்.

இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் ஆர்ச்சரின் 45 பந்துகளை எதிர்கொண்ட வார்னர் 32 ரன்களை மட்டுமே எடுத்ததோடு 6 முறை ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான வார்னர் ஆர்ச்சருக்கு எதிராக இப்படி தடுமாறுவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :