செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (11:46 IST)

வைடுகளுக்கும் ரிவ்யு வேண்டும் – தோனி சர்ச்சைக்குப் பின் கோலி கருத்து!

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கடந்த போட்டியில் வைடு பால் குறித்த அதிருப்தியை தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 19 ஆவது ஓவரின் போது தாக்கூர் வீசிய பந்து பேட்ஸ்மேனை விட்டு விலகி செல்ல அம்பயர் வைட் காட்டுவதற்காக கையை விரிக்க முயன்றபோது தோனி அவரைப் பார்த்து கடுமையாக கோபம் கொண்டதால் வைட் கொடுக்காமல் கையை பாதியிலேயே அம்பயர் மூடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆர்சிபி கேப்டன் கோலி ’வைடு மற்றும் இடுப்புயர நோபால் ஆகியவற்றை ரிவ்யு செய்யும் உரிமை பீல்டிங் கேப்டனுக்கு வழங்கப்படவேண்டும். ஏனென்றால் ஐபிஎல் போன்ற தொடரில் சிறு தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்’ எனக் கூறியுள்ளார்.