1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (11:05 IST)

டிராவிட் பதவியில் விவிஎஸ் லட்சுமணன்?

ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி பதவி காலம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து சமீபத்தில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் தன் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் பொறுப்பு விவிஎஸ் லட்சுமணனுக்கு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஜோடிகளாக வலம் வந்த லட்சுமணன் டிராவிட் இணை இப்போது மீண்டும் இணைந்து இந்திய அணி மற்றும் இளம் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர் என்பது பாஸிட்டிவ்வான அம்சமாக பார்க்கப்படுகிறது.