செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:56 IST)

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கிறாரா விக்ரம் ரத்தோர்?

இந்திய அணிக்கு வரும் காலத்தில் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. அதையடுத்து இந்திய அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களில் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் 2018 ஆம் ஆண்டு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட விக்ரம் ரத்தோர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.