பேட்ஸ்மேன்களுக்கு அநீதி இழைத்த ஐசிசி: கங்குலி பாய்ச்சல்!

Last Updated: வியாழன், 25 ஜனவரி 2018 (17:00 IST)
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது தென் ஆப்ரிக்கா விளையாடி வருகிறது.


இந்நிலையில் கங்குலி தனது ட்விட்டர் பதிவில், இந்தப் பிட்சில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது அநீதியாகும். 2003-ல் நியூஸிலாந்தில் இதே போன்ற பிட்ச்களை நாங்கள் எதிர்கொண்டோம். இத்தகைய பிட்ச்களில் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு குறைவு. ஐசிசி இதனை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :