திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (16:38 IST)

அடிபட்ட ரோஹித் ஷர்மாவை நேரில் சென்று சந்தித்த விராட் கோலி!

பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சில தினங்களுக்கு முன்னர்.

இந்த போட்டியில் பெங்களூர் அணி எளிதாக 52 ரன்கள் வித்தியாசத்தில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இந்த போட்டியில் பேட்டிங் செய்யும் போது எதிர்முனையில் நின்ற ரோஹித் ஷர்மாவை இஷான் கிஷான் அடித்த பந்து கையில் பலமாக தாக்கியது.

அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே ரோஹித் ஷர்மா அவ்ட்டானார். போட்டி முடிந்த பின்னர் கையில் கட்டோடு இருந்த அவரை விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரஸ்ஸிங் அறைக்கே சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வரும் நிலையில் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.