வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (09:45 IST)

கெய்லின் விக்கெட்டில் விளையாடிய நடுவர் – உலகக்கோப்பையில் தொடங்கிய சர்ச்சை !

உலகக்கோப்பைத் தொடரில் நேற்று பரப்பான ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

நேற்று நடைபெற்ற 10 ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பரபரப்பாக நடந்து முடிந்த அந்த போட்டியில் நடுவர்கள் செய்த சில தவறுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. மேற்கிந்திய தீவுகள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பேட் செய்யும் போது இரண்டு முறை அவர் தவறாக அவுட் கொடுக்கப்பட்டு டீஆர் எஸ் முறையின் மூலம் ரிவ்யூ கேட்கப்பட்டு தப்பினார்.

ஆனால் அவர் மூன்றாவது முறையாக எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். ஸ்டார்க் வீசிய அந்த பந்துக்கு முந்தையப் பந்து நோ பாலாக அமைந்தது. ஆனால் அதை நடுவர் சரியாக கவனிக்க வில்லை. நடுவர் அதைக் கவனித்து நோபால் அறிவித்திருந்தால் அடுத்த பால் ப்ரீ ஹிட்டாக அமைந்திருக்கும். பிரி ஹிட்டில் அவுட் ஆனாலும் அது செல்லாது என்பதால் கெய்ல் தப்பித்திருப்பார். ஆனால் நடுவர்களின் மோசமான பணியால் கெய்ல் வெளியேற வேண்டிய சூழல் உருவானது. இதனால் அவர்களின் வெற்றியும் நூலிழையில் கைவிட்டுப் போனது.