1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (07:38 IST)

ஐபிஎல் 2021: சென்னை வந்தடைந்த ‘தல’ தோனிக்கு உற்சாக வரவேற்பு

ஐபிஎல் 2021: சென்னை வந்தடைந்த ‘தல’ தோனிக்கு உற்சாக வரவேற்பு
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடந்தது என்பதும் அந்த ஏலத்தில் முக்கிய வீரர்களை பல அணிகள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தார்கள் என்றும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி இணையும் என்றும் கூறப்பட்டாலும், ஏலம் நடந்தபோது அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுவரை 13 ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருப்பது 14வது சீசன் என்பது குறிப்பிடத்தக்கது