1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (07:02 IST)

தல தோனி பெளலிங் எடுத்தது தப்பா? விமர்சனத்தை அடித்து நொறுக்கிய தல தோனி

MS Dhoni
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அவருடைய முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 
 
தொடர்ச்சியாக செஞ்சுரி அடித்து வரும் சுப்மன் கில் போன்ற வீரர் குஜராத் அணியில் இருக்கும் போது அவர் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறு என பலர் விமர்சனம் செய்தனர். 
 
ஆனால் தோனி இதற்கு கூறிய காரணம் மழை வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் டக்வொர்த் லீவிஸ் முறை பயன்படுத்தப்பட்டால் இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகம் அதிகம் என்றும் கூறினார். 
 
அவர் கூறியது போலவே சரியாக இரண்டாவது பாதியில் மழை வந்தது என்பதும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டாஸ் வென்றவுடன் பவுலிங் எடுத்தது தவறு என விமர்சனம் செய்த அனைவரும் தல தோனி செய்தது சரிதான் என்று அவர் மிகச் சரியாக ஆட்டத்தை கணித்து உள்ளார் என்றும் பாராட்டு தெரிவித்தனர்..
 
Edited by Siva