திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மே 2023 (21:30 IST)

ஐபிஎல்-2023: இறுதிப் போட்டி: சுதர்சன், கில் அதிரடி ஆட்டம்...சென்னை கிங்ஸ் அணிக்கு இலக்கு இதுதான்!

chennai super kings
இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்-2023, 16 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில்,  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பௌலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், சஹா 54 ரன்னும், கில் 39 ரன்னும், சுதர்சன் 96 ரன்னும், பாண்ட்யா 21 ரன்னும் அடித்தனர்.  எனவே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சென்னை அணி தரப்பில், சாஹர், ஜடேஜா தலா 1 விக்கெட்டும், மதீஷா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சென்னை அணி இன்னும் சில  நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது.