வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:49 IST)

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விருதுகள்! – யார் யாருக்கு தெரியுமா?

Awards
ஆண்டுதோறும் மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் விருதுகளில் இந்த முறை தமிழக வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

விளையாட்டு துறையில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு தேசிய விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட உள்ளது.


தமிழகத்தின் இளம் சதுரங்க போட்டி வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட குஜராத் மாநிலத்திற்காக விளையாடி வரும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவெனில் வாலறிவனும் அர்ஜூனா விருது பெற உள்ளார்.

மேலும் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 3 தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

Edit by Prasanth.K