வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (16:28 IST)

சதத்தை நூலிழையில் தவறவிட்ட சுப்மன் கில்.. விராத் சதமடிப்பாரா?

subman gil
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து முதல் ஓவரில் ரோகித் விக்கெட்டை இழந்தாலும் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் மிக அபாரமாக விளையாடினார். குறிப்பாக சுப்மன் கில் 92 பந்துகளில் 92 ரன்கள் அடித்த நிலையில்  மதுசங்கா பந்தில் அவுட் ஆனார். இதனால் நூலிழையில் சுப்மன் கில் சதத்தை தவறவிட்டதை அடுத்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது விராட் கோஹ்லி 87 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதால் அவர் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

 இன்றைய போட்டியில் இந்தியா வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற  ரசிகர்களின்  ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran