வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (15:16 IST)

கடைசி ஓவரில் 3 விக்கெட்: இங்கிலாந்துக்கு இலங்கை கொடுத்த இலக்கு இவ்வளவு தான்!

sri vs eng
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது
 
இலங்கை அணி 19 ஓவரில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது என்பதும் அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 142 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதும் ஆஸ்திரேலியா வெளியேற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran