வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 5 நவம்பர் 2022 (08:46 IST)

நடுவர்கள் செய்த குளறுபடி… நேற்றைய போட்டியில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங் செய்தபோதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கன் அணி கடைசி ஓவர் வரை ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டியது.

இந்நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய அணி பேட் செய்த பொழுது நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். பின்னர் இதை ரசிகர்கள் கண்டுபிடித்து சொல்வதற்குள் அடுத்த ஓவர் வீசப்பட்டு விட்டது.