புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (06:31 IST)

தனஞ்ஜயாவுக்கு திருமண பரிசாக கிடைத்த 6 விக்கெட்டுக்கள்

நேற்று நடைபெற்ற இந்தியா-இலங்கை 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டார் தனஞ்ஜயா என்ற இலங்கை பந்துவீச்சாளர். இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுக்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றியை பிரகாசமாக்கினார். அதிலும் குறிப்பாக 17வது ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
 
இதில் ஒரு விசேஷம் என்னவெனில் தனஞ்ஜயாவுக்கு நேற்று தான் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆன கையோடு மைதானத்தில் களமிறங்கிய தனஞ்ஜயாவுக்கு திருமண பரிசாக 6 விக்கெட்டுக்கள் கிடைத்தது.
 
ஆனால் அந்த விக்கெட்டுக்கள் அணிக்கு வெற்றியை தேடித்தரவில்லை என்பது பெரும் சோகம். ஆனாலும் தனஞ்ஜயாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது மேலும் ஒரு பரிசாகவே கருதப்படுகிறது.