வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 24 ஜூன் 2017 (01:02 IST)

இந்திய-மேற்கிந்திய தீவுகள் முதல் போட்டி: ஆட்ட நாயகன் விருதை பெற்ற மழை

சாம்பியன்ஷிப் டிராபி தோல்வியை அடுத்து இந்தியா கலந்து கொள்ளும் முதல் போட்டியான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது.



 


நேற்று போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது எனவே முதலில் களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் ரஹானே 62 ரன்களும், தவான் 87 ரன்களும் விராத் கோஹ்லி 32 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டி மழையால் முடிவின்றி போனதால் ஆட்டநாயகன் விருதை மழை பெற்றது.