திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2022 (19:11 IST)

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

indvssa
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டி20 போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
 
சற்று முன் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றுவிட்டால் 3 -0 என்ற கணக்கில் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணி மிகவும் கவனமாக விளையாட வேண்டும்