Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உள்நாட்டில் அசிங்கப்பட்ட தென் ஆப்ரிக்கா: விவரம் உள்ளே...

Last Modified வியாழன், 15 பிப்ரவரி 2018 (16:54 IST)
இந்திய அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் கோட்டை விட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் சுதாரித்துக்கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது. 
நடந்து முடிந்த 5 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தினால் தென் ஆப்ரிக்கா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்க அணி மூன்றாம் முறையாக உள்நாட்டில் தொடரை இழந்துள்ளது.
 
தென் ஆப்ரிக்காவின் இந்த தோல்வி மிகவும் மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியுடன் மோதி 1996 - 1997 மற்றும் 2001 - 2002 இரண்டு முறை தொடரை இழந்துள்ளது. அதன் பின்னர் தற்போது இந்தியாவுடன் மோதி தொடரை இழந்துள்ளது. 
 
இந்நிலையில், 6 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது. நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா ஆர்வமாக உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :