திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (16:32 IST)

சைபர் தாக்குதல்: இந்தியா மீது குறிவைக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதிகளை அதிரடியாக நிறுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது. அவர்கள் தொடர்ந்து தீவிரவாத சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. தற்போது சைபர் தாக்குதலில் அனைவரும் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.