1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (17:52 IST)

சூர்யா மகளுக்கு கோல்டன் பேட் பரிசு கொடுத்த கேப்டன் மிதாலிராஜ்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றவர். நூலிழையில் கோப்பையை தவறவிட்டாலும், அவருக்கு ரசிகர்களிடையே நல்ல புகழ் கிடைத்தது



 


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட மிதாலிராஜ், சிறுவயதிலேயே விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சாதனை செய்து வரும் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியாவுக்கு கோல்டன் பேட் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

இந்த சின்ன வயதிலேயே மகளை விளையாட்டு திறமையுடன் வளர்க்கும் ஜோதிகாவுக்கு மிதாலிராஜ் மேடையிலேயே பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.