Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

10 சிக்ஸர் அடித்து தெறிக்க விட்ட சாம்சன்

Sanju
Last Updated: ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (18:20 IST)
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் 10 சிக்ஸர் அடித்துள்ளார்.

 
ஐபிஎல்2018 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
20ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 92 குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். சாம்சன் 10 சிக்ஸர் விளாசினார். ஒட்டுமொத்தமாக அணி 14 சிக்ஸர் அடித்துள்ளது. 
 
பெங்களூர் அணியின் பந்துவீச்சை சாம்சன் அடித்து தும்சம் செய்தார். இதற்கு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த ஆண்ட்ரூ ரஸல் 11 சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது சாம்சன் 10 சிக்ஸர் அடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :