Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய இலங்கை முன்னாள் கேப்டன்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (18:58 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடியதை இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககாரா பாராட்டியுள்ளார்.

 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஒருநாள் போட்டி தொடர் முழுவதும் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிக்ஸர் மழை பொழிந்தார்.
 
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தார். இவரது சிறப்பான ஆட்டம் குறித்து இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
ரோகித் சர்மா நாளுக்கு நாள் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேசமயம் அவருடைய ஆட்டம் அழகான ஸ்டைலிலும், தாக்குதலாகவும் உள்ளது. 
 
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
 
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இதுவரை 14 சதங்களை விளாசியுள்ளார். இதில் 6 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :