Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

புதன், 27 செப்டம்பர் 2017 (18:33 IST)

Widgets Magazine

இலங்கையின் யாழ்பாணத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


 
 
யாழ்ப்பாணம் புங்குடு தீவைச் சேர்ந்த பள்ளி மாணவி வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பிய போது அவரை கும்பல் ஒன்று கடத்தி சென்று மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது.
 
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை அந்த நாட்டு காவல் துறையினர் கைது செய்து அதில் 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மீதமுள்ள 4 பேர் மீது சதித்திட்டம் தீட்டியது மற்றும் உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாணவியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த முக்கிய குற்றவாளி சுவிஸ் குமார் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

மியான்மரில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவம்

நாகலாந்தை தனி நாடாக கோரும் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் எல்லைத் ...

news

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிசிடிவி கேமிரா மூலம் சிக்கிய குற்றவாளி!

போபாலில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இந்த குற்றச்செயலில் ...

news

மருத்துவமனையில் ஜெ.; தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த பரபரப்பு தகவல்கள்

உடல் நலக்குறைபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...

news

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

Widgets Magazine Widgets Magazine