தனிமைப்படுத்தப்பட்டார் சாய்னா நேவல்: என்ன காரணம்?
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
பாங்காக் நாட்டில் நடைபெறவுள்ள பேட்மிட்டன் போட்டிக்காக இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள சமீபத்தில் சென்றிருந்தார் சாய்னா நேவால். இதனை அடுத்து போட்டி தொடங்குவதற்கு முன்னர் கொரோனா விதிமுறைகளின்படி ஒவ்வொரு வீரரும், வீராங்கனையும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது
அந்த விதியின் படி சாய்னா நேவால் தற்போது தன்னை தானே தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்தப்பட்டு போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பதும் அந்தப் பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
பாங்காங்கில் நடைபெறும் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாட இருக்கும் சாய்னா நேவால் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது