திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (11:21 IST)

பாட்மிண்ட்டன் வீராங்கை பி வி சிந்து ஓய்வா ? அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

இந்திய பாட்மிண்ட்டன் வீராங்கனை பி வி சிந்து தனது 25 ஆவது வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த பேட்மிண்ட்டன் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியவர் இந்தியாவைச் சேர்ந்த பி  வி சிந்து. அதன் பின்னர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார். இந்தியாவில் பேட்மிண்ட்டன் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்நிலையில் பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பி.வி. சிந்து லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகளை பெறுவதற்காகவே லண்டன் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல பயிற்சியாளர் கோபிசந்துடனும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இப்போது தான் ஓய்வு பெற போவதாக பி வி சிந்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.