வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (19:36 IST)

பிசிசிஐ-க்கு ரூ.52 கோடி அபராதம் ஏன்?

பிசிசிஐ என்று கூறப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சந்தை வர்த்தக போட்டி ஆணையம் ரூ.52.24 கோடி அபராதம் விதித்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமம் ஒதுக்கீட்டில் எத்தேச்சதிகாரமாக பிசிசிஐ செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை நடத்தி வரும் பிசிசிஐ, அவ்வப்போது விருப்பத்திற்கேற்ப விதிகளை மாற்றி கொண்டு வருவதாகவும், ஒருசில தகுதியான போட்டியாளர்கள், இந்த போட்டிகளிலும், வர்த்தகத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையிலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வர்த்தக போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு இதே தொகை பிசிசிஐக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அபராத தொகையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட போவதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.