1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (14:27 IST)

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா – தேர்வுக்குழு தலைவர் சூசகம் !

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவைத் தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் தனது இடத்தை நிலைநிறுத்திக் கொண்ட ரோஹித் ஷர்மாவால் டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. சமீபத்தில் முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட அவர் ஒரு போட்டியில் கூட இறக்கப்படவில்லை.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வரும் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதனால் அவருக்குப் பதில் ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் பின் வரிசையில் இறங்கும் ரோஹித்துக்கு ரஹானே மற்றும் ஹனுமா விஹாரியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.