திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:48 IST)

தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை: ரோகித் வருத்தம்!

ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. 
 
போட்டியின் போது, டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
 
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியின் தொடக்காட்ட வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இடையில் கொஞ்சம் சொதப்பினாலும், இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 151ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு தரத்தை குறைத்து எடை போட்டு தோல்வியை சந்தித்தது. தோல்விக்குப் பிறகு ரோகித் கூறியதாவது, ஐபிஎல் தொடர் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. பிட்ச் வேறுரகம், நாங்கள் விரைவில் எங்களை அதற்கேற்ப வடிவமைத்து கொள்ளவில்லை. 
 
இரண்டாவது முறையும் நெருக்கமாக வந்து தோற்றதை ஜீரணிக்க முடியவில்லை. கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருக்கலாம். எங்களுக்கு மீண்டெழ இன்னும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.