Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டாஸ் வென்ற சிஎஸ்கே பீல்டிங் செய்ய முடிவு

MI
Last Updated: சனி, 7 ஏப்ரல் 2018 (19:43 IST)
முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல்2018 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது. சென்னை அணி இரண்டு ஆண்டுகள் கழித்து விளையாடுகிறது. அதுவும் முதல் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை அணியுடன் மோதுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதும் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வான்கடே மைதானத்தில் இரண்டாம் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இதுவரை இருந்துள்ளது. இதனால் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :