1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஜூலை 2018 (20:15 IST)

இந்தியாவுக்கு கடினமான இலக்கு; இங்கிலாந்து 198 ரன்கள் குவிப்பு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.

 
இந்திய அணியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 3வது போட்டி நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராய், பட்லர் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்க உள்ளது.