வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (10:38 IST)

இரண்டு ஓவர் ரெஸ்ட் எடுத்துக்கொண்ட தோனி – கீப்பிங் செய்த ரிஷப் பண்ட் !

பங்க்ளாதேஷுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோனி திடீரென பெவிலியனுக்குக் கிளம்பிச்செல்ல அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கீப்பிங் செய்தார்.

பங்க்ளாதேஷுக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணியில் தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் விளையாடினார்கள்.

ஆனால் வழக்கம்போல தோனியே விக்கெட் கீப்பிங் செய்தார். ஆனால் இடையில் அவர் திடீரென பெவிலியனுக்கு செல்ல அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார். இரண்டு ஓவர்கள் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய அப்போது பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் எல்பிடபுள்யூ கேட்கப்பட்டது. ஆனால் ரிவியூவில் அது பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜ் ஆனதுய் தெரியவந்தது. ஆனால் அப்போது தோனி இருந்திருந்தால் அதை சரியாகக் கவனித்து ரிவ்யூ கேட்காமல் இருந்திருப்பார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.