நான்காவது இடத்தில் ஏன் ரிஷப் பண்ட் – ரோஹித் ஷர்மா அடடே விளக்கம் !
உலகக்கோப்பையில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் ரிஷப் பந்த் நான்காவது வீரராகக் களமிறங்கியது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியையே சந்திக்காத அணி என்ற கிரீடத்துடன் வலம் வந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக்கவ்வியுள்ளது. நேற்றையப் போட்டியில் முதல் முதலாக உலகக்கோப்பையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் பேட்டிங் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
வழக்கமாக அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். ஆனால் நேற்று ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொள்ளும்போது தடுமாறினாலும் பின்னர் சில பவுண்டரிகளை அடித்து விளாசினார். ஆனால் எதிர்பாராத விதமாக 32 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பாண்ட்யா மற்றும் தோனி ஆகியோர் இருக்கும் போது ரிஷப் பண்ட்டை நான்காவதாக இறக்கியது குறித்து ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது ‘ நீங்கள்தான் ரிஷப் பண்ட் எங்கே? எங்கே ? எனக் கேள்வி எழுப்பினீர்கள். இதோ இப்போது நான்காவது வீரரராக அவர் விளையாட வந்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.
ரோஹித் ஷர்மாவின் இந்த பதில் ரிஷப் பண்ட் மேல் உள்ள கோபமா அல்லது ஊடகங்கள் மேல் உள்ள கோபமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.