1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (17:00 IST)

ரூ.1757 கோடியில் உருவான மைதானத்தை ஒரே நாளில் காலி செய்த மழை!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரஷ்யாவில் நடைபெற்ற இந்த தொடரில் பிரான்ஸ் கோப்பையை தட்டிசென்றது. 
 
உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ரஷியாவில் கோடிக்கணக்காக பணத்தை செலவு செய்து பல்வேறு மைதானங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வோல்கோகிராட் மைதானம். 
 
இந்த மைதானத்தை கட்ட சுமார் ரூ.1757 கோடி செலவிடப்பட்டது. இந்த மைதானத்தில் 8 ஆட்டங்கள் நடைபெற்றது. இறுதிப்போட்டியின் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது.
 
வோல்கோகிராட் மைதானத்திற்கு அருகே ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்ள கட்டுமானத்தை அடித்து சென்றது. 
 
இதனால் பல மீட்டர் தொலைவிற்கு பெரிய பள்ளம் விழுந்தது. பலகோடி ரூபாய் செலவிட்டு கட்டப்பட்ட மைதானம் ஒரு மழைக்கே நாசமானது. மேலும், மீதமுள்ள கட்டப்பட்ட மைதானங்களை ரஷ்யா எதற்காக பயன்படுத்தும் என தெரிவில்லை.