திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (20:22 IST)

ரஷ்யாவுடன் உறவு சீர்குலைய அமெரிக்காவின் முட்டாள்தனம்தான் காரணம்: டிரம்ப்

அமெரிக்காவில் இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களின் முட்டாள்தனத்தினமே ரஷ்யாவுடனான உறவு சீர்குலைய காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் மிளாடின் புதின் ஆகியோர் இன்று பின்லாந்தில் சந்தித்து பேசினர். இரு தலைவர்களின் சந்திப்பால் இரண்டு நாடுகளின் மத்தியில் இருந்த பனிப்போர் விலகிவிடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன.
 
ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் உளவுத்துறை தலையிட்டதாக வெளிவந்துள்ள செய்தியால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய சந்திப்பால் இந்த விரிசல் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் புதின் சந்திப்புக்கு பின்னர் டிரம்ப் தனது டுவிட்டரில், ' ‘ரஷியா உடனான அமெரிக்காவின் உறவு மிகவும் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பல ஆண்டுகால அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு நன்றி. தற்போதைய தேடலுக்கும் (ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணை)  நன்றி’ என அவர் டுவீட் செய்துள்ளார். டிரம்பின் இந்த டுவீட்டை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் லைக் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது