புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (15:57 IST)

மைக்கேல் வாஹ்ன் ஒரு நிறவெறியர்…. குற்றச்சாட்டை வைத்த சுழல்பந்து வீச்சாளர்!

இங்கிலாந்தின் டொமஸ்டிக் அணியான யார்க்‌ஷயருக்காக விளையாடியுள்ள அஜிம் ரபீக் மைக்கேல் வாஹ்ன் குறித்து தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் இப்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் சமூகவலைதளங்களில் இந்திய அணியையும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியையும் கேலி செய்து விமர்சனங்கள் வைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஆசிய வீரர்கள் மீது நிறவெறியோடு நடந்துகொண்டதாக இங்கிலாந்து உள்ளூர் அணியான யார்க்‌ஷயர் அணியின் வீரர் அஜீம் ரஃபிக் குற்றம் சாட்டியுள்ளார். இவர் மைக்கேல் வான் தலைமையில் யார்க்‌ஷயர் அணிக்காக விளையாடி இருக்கிறார். அப்போது அஜீமோடு சேர்த்து பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் அனைவரையும் அவர் நிறவெறி கொண்டு பேசி இழிவு செய்ததாக அஜிம் குற்றம் சாட்டியுள்ளார். ரபீக்கின் இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்து வீரர் அதில் ரஷீத்தும் உறுதி செய்துள்ளார்.