ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (08:35 IST)

ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நடால்!

rafael nadal
கடந்த சில நாட்களாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது 
 
இந்த நிலையில் நேற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டி நடக்க இருந்தது.
 
இந்த போட்டியில் காயம் காரணமாக ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் என்பவர் விலகியதை அடுத்து போட்டி நடைபெறாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக  நடால் அறிவிக்கப்பட்டார்
 
ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
இந்த நிலையில் இறுதிப் போட்டியில் விளையாட இருந்த ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் கீழே விழுந்து மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுது துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது