ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 23 மே 2022 (17:08 IST)

ஐபிஎல் இறுதி போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?

ipl final
ஐபிஎல் இறுதி போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?
ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் மே 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் மழை பெய்து போட்டி ரத்து ஆனால் மறுநாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் முதல் பாதி மட்டும் விளையாட்டு முடிந்தவுடன் மழை பெய்தால் இரண்டாம் பாதி அடுத்த நாள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ச்சியாக பெய்து மீண்டும் போட்டி ஆரம்பம் ஆகும் நிலை இருந்தால் 5 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்படும் என்றும் ஐந்து ஓவருக்கும் நேரம் இல்லை என்றால் ஒரே ஒரு சூப்பர் ஓவரில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மழை காரணமாக இரண்டு நாட்களும் ஒத்திவைக்கப்பட்டால் முந்தைய போட்டிகளில் அணிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் கோப்பை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது