Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து குயிண்டன் டி காக் விலகினார்

wic
Last Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (12:16 IST)
தென்னாப்பரிக்காவின் விக்கட் கீப்பர்  குயிண்டன் டி காக்,  இடது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
தென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குயிண்டன் டிகாக், இந்திய அணியுடன் விளையாடிய 2-வது போட்டியின் போது, இடது கை மணிக் கட்டு பகுதியில் காயம் எற்பட்டது. இந்த காயம் குணமாக அவருக்கு இரண்டு முதல் வாரத்திற்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் தென்னாப்பரிக்கா கிரிக்கெட் வாரியம் குயிண்டன் டி காக் எஞ்சிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலக்குவதாக அறிவித்தது .ஏற்கனவே காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ் ஆகியோர் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடதக்கது. நாளை கேப்டவுனில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் யார் விக்கெட்கீப்பராக விளையாடுவார்கள் என்பது தெரியவில்லை.  


இதில் மேலும் படிக்கவும் :