1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (23:24 IST)

சென்னை அணிக்கு முதல் தோல்வி: பஞ்சாப் த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதன்முதலாக கேப்டன்களாக தோனி மற்றும் அஸ்வின் மோதும் போட்டி என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி கெயிலின் அதிரடியால் 20 ஓவர்களில் 197 ரன்கள் அடித்தது. கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.
 
இந்த 198 என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வரை தோனி மற்றும் பிராவோ இருந்தும் சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிட்டவில்லை அந்த அணிக்கு ஒரு சோகமே