1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (11:59 IST)

என்னால் தான் வார்னர் சதம் அடிக்கவில்லை: பவல் பேட்டி

warner powerl
என்னால் தான் வார்னர் சதம் அடிக்கவில்லை: பவல் பேட்டி
நேற்றைய போட்டியில் என்னால் தான் டேவிட் வார்னர் சதம் அடிக்கவில்லை என அந்த அணியின் வீரர் பவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 92 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடினார்
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் தொடக்கத்தில் ஒரு சிங்கிள் அடித்து நான் உங்களுக்கு ஸ்டிரைக் கொடுக்கின்றேன், நீங்கள் சதமடித்து கொள்கிறீர்களா என்று கேட்டேன் என்றும், ஆனால் அதற்கு வார்னர்,  அப்படி கிரிக்கெட் விளையாடுவது சரியாக இருக்காது என்றும், உங்களால் முடிந்த வரை அடித்து நொறுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியதாக பவல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
 அவர் கூறிய படியே நான் விளையாடினேன் என்றும், அதனால்தான் டேவிட் வார்னர் சதம் அடிக்கவில்லை என்று பவல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது