நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட முடியாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரில் தங்கள் அணியின் லீக் சுற்று ஆட்டங்களை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட விருப்பமில்லை என ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு ஐசிசி என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran