வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (17:42 IST)

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் பிரபல வீரர் மொயின் அலி

moeen ali
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்றார் பிரபல வீரர் மொயின் அலி.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வரும் பிரபல வீரர் மொயின் அலி.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயின் அலி தன் ஓய்வை பரிசீலிக்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து,  இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு மொயீன் அலி தன் முடிவைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், வரும் ஜுன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஸஸ் தொடரிலும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்து அணி வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.