தமிழ் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி: மீள வாய்ப்பே இல்லையா?

Last Modified வெள்ளி, 21 டிசம்பர் 2018 (22:10 IST)
புரோ கபடி தொடர் போட்டியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று நடைபெற்ற அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி தமிழ் தலைவாஸ் அணியினர் சிறப்பாக விளையாடினாலும், ஒருசிலர் செய்த தவறுகளால் எதிரணிக்கு அதிக புள்ளிகள் கிடைத்தது.

இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டது. இறுதியில் பெங்கால் அணி 27ப்24 என்ற புள்ளிக்கணககில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முடிவில் புள்ளிகள் கணக்கின்படி தமிழ் தலைவாஸ் அணி 'பி' பிரிவில் 38 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவுஇதில் மேலும் படிக்கவும் :